சிவய.திருக்கூட்டம் sivaya.org Please set your language preference by clicking below languages link |
Selected Thiruppugazh
Thiruppugazh Thalangal
All Thiruppugazh Songs
Thiruppugazh by Santham
This page in
Tamil
Hindi/Sanskrit
Telugu
Malayalam
Bengali
Kannada
English
ITRANS
Marati
Gujarathi
Oriya
Singala
Tibetian
Thai
Japanese
Urdu
Cyrillic/Russian
Spanish
Hebrew
Thiruppugazh from Thalam: ஒடுக்கத்துச் செறிவாய்
987 வழக்குச் சொற்பயில்
987
ஒடுக்கத்துச் செறிவாய் வழக்குச் சொற்பயில் தனத்தத் தத்தன தாத்த தத்தன
தனத்தத் தத்தன தாத்த தத்தன
தனத்தத் தத்தன தாத்த தத்தன ...... தனதான
வழக்குச் சொற்பயில் வாற்ச ளப்படு
மருத்துப் பச்சிலை தீற்று மட்டைகள்
வளைத்துச் சித்தச சாத்தி ரக்கள ...... வதனாலே
மனத்துக் கற்களை நீற்று ருக்கிகள்
சுகித்துத் தெட்டிக ளூர்த்து திப்பரை
மருட்டிக் குத்திர வார்த்தை செப்பிகள் ...... மதியாதே
கழுத்தைக் கட்டிய ணாப்பி நட்பொடு
சிரித்துப் பற்கறை காட்டி கைப்பொருள்
கழற்றிக் கற்புகர் மாற்று ரைப்பது ...... கரிசாணி
கணக்கிட் டுப்பொழு தேற்றி வைத்தொரு
பிணக்கிட் டுச்சிலு காக்கு பட்டிகள்
கலைக்குட் புக்கிடு பாழ்த்த புத்தியை ...... யொழியேனோ
அழற்கட் டப்பறை மோட்ட ரக்கரை
நெருக்கிப் பொட்டெழ நூக்கி யக்கணம்
அழித்திட் டுக்குற வாட்டி பொற்றன ...... கிரிதோய்வாய்
அகப்பட் டுத்தமிழ் தேர்த்த வித்தகர்
சமத்துக் கட்டியி லாத்த முற்றவன்
அலைக்குட் கட்செவி மேற்ப டுக்கையி ...... லுறைமாயன்
உழைக்கட் பொற்கொடி மாக்கு லக்குயில்
விருப்புற் றுப்புணர் தோட்க்ரு பைக்கடல்
உறிக்குட் கைத்தல நீட்டு மச்சுதன் ...... மருகோனே
உரைக்கச் செட்டிய னாய்ப்பன் முத்தமிழ்
மதித்திட் டுச்செறி நாற்க விப்பணர்
ஒடுக்கத் துச்செறி வாய்த்த லத்துறை ...... பெருமாளே. Add (additional) Audio/Video Link
This page was last modified on Thu, 09 May 2024 01:44:51 -0400